• Jul 15 2026

விஜய் அரசியலுக்கு வந்தது அவமானத்தாலா? பலருக்கும் தெரியாத உண்மையை உடைத்த ஜேம்ஸ் வசந்தன்

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சமீபத்தில் நடிகர் மற்றும் அரசியல் பிரமுகர் விஜய் குறித்து கூறிய கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த கருத்தில், “விஜய் அதிகார வெறியோட வந்தார், அதை அவர் அடைஞ்சிட்டார், அதோட அவரோட அரசியல் முடிஞ்சி போச்சு” என்று அவர் கூறியுள்ளார். மேலும், விஜய்யின் அரசியல் ஆர்வம் ஆரம்பமானதே ஒரு சம்பவத்தால் ஏற்பட்டதாகவும் அந்த பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.


அதில் குறிப்பாக, ஒரு நிகழ்விற்கு உதயநிதி ஸ்டாலின் வந்தபோது விஜயின் காரை நிறுத்தியதாகவும், அதனால் ஏற்பட்ட அவமான உணர்வே அவரை அரசியலுக்குள் தள்ளிய முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

“என் காரை நிறுத்தினீங்க, நான் வாறன்...” என்ற மனநிலைதான் பின்னாளில் அவரது அரசியல் நுழைவுக்கு தூண்டுகோலாக இருந்தது எனவும் கூறப்படுவது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

Advertisement

Advertisement