• May 06 2024

கிளாமர் காட்சிகளில் நடிக்க தமன்னா இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா?- இதை யாரும் எதிர்பார்க்கலையே

stella / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து பிரபல்யமானவர் தான் தமன்னா. இவர் தற்பொழுது இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார்.இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், தமன்னா அந்த படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டிலும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என ஹாட்டான வெப்சீரிஸ்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் தமன்னா.அமேசான் பிரைமில் விரைவில் ஜீ கர்தா வெளியாக உள்ள நிலையில், இந்த மாத இறுதியில் நெட்பிளிக்ஸில் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெளியாகிறது. இந்நிலையில், லஸ்ட் ஸ்டோரீஸ் 2வில் நடிக்க நடிகை தமன்னாவுக்கு அதிகபட்ச சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


 ஜெயிலர் படத்தில் நடிக்கவே தமன்னாவுக்கு 4 கோடி ரூபாய் தான் சம்பளம் என்கின்றனர். இந்நிலையில், ஓவர் கிளாமர் நிறைந்த லோ பட்ஜெட் ஆந்தாலஜியான லஸ்ட் ஸ்டோரீஸ் 2வில் நடிக்கவும் 4 கோடி ரூபாய் சம்பளமாக தமன்னா வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அமேசான் பிரைமில் வெளியாக உள்ள ஜீ கர்தா வெப்தொடரில் நடிக்கவும் அதே சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.


அதே ஆந்தாலஜியில் நடித்துள்ள நடிகை கஜோலுக்கு இந்த வயதிலும் அவருக்கு 3 கோடி ரூபாய் சம்பளத்தை பேசி லஸ்ட் ஸ்டோரீஸ் 2வில் நடிக்க வைத்துள்ளனர் என்கின்றனர்.4 இயக்குநர்கள் உருவாக்கி உள்ள 4 தனித்தனி கதைகளுக்கும் சேர்த்து மொத்தம் 60 கோடி தான் பட்ஜெட் என்கின்றனர். இதில், நடிகைகள் தான் பிரதானம் என்பதால் அவர்களுக்கான சம்பளத்தில் மட்டும் தயாரிப்பு தரப்பு கை வைக்கவில்லையாம் என்பதும் குறிப்பிடத்தக்கது .


Advertisement

Advertisement

Advertisement