• May 13 2024

தளபதி 68 படத்தில் கதாநாயகி இந்த நடிகை தானா?- அப்போ த்ரிஷா இல்லையா?- ரொம்ப முன்னேறிட்டாங்களே

stella / 11 months ago

Advertisement

Listen News!


நடிகர் விஜய், விரைவில் அரசியலில் நுழையப் போகிறார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் அவரது செயல்களும் அமைந்துள்ளன. நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

இதையடுத்து அம்பேத்கர் பிறந்தநாள் அன்று அனைத்து மாவட்டத்திலும் உள்ள மக்கள் இயக்க நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார் விஜய். அவரின் இந்த படிப்படியான நிகழ்வுகள் அவரின் அரசியல் வருகையை உறுதி செய்யும் விதமாகவே உள்ளது என அரசியல் விமர்சகர்களும் கருதுகின்றனர்.


இது தவிர லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்னும் படத்திலும் நடித்து வருகின்றார் .இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.இப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. 


இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி இருப்பது ப்ரியா பவானி ஷங்கர் தானாம். இதனால் அப்போ த்ரிஷா இந்த படத்தில் கமிட்டாகவில்லையா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement