• Sep 27 2023

இயக்குநர் மோகன்.ஜியின் போன் நம்பரை பஹத் பாசில் ப்ளாக் செய்தாரா?- முக்கிய பிரபலம் வெளியிட்ட வீடியோ

stella / 1 month ago

Advertisement

Listen News!

மலையாள படங்களின் மாஸ் ஹீரோவான நடிகர் ஃபகத் பாசில் மிகவும் டெடிகேஷனான நடிகர் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்று தான். தன் தந்தையின் அறிமுகத்துடன் சினிமாவில் வந்த இவர் படத்திற்கு படம் புது வித்தியாசமாய் நடிப்பில் மிரள வைத்தார்.

 எந்த கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதை நன்றாக உள்வாங்கி மிகச்சிறப்பாக நடித்து பெயர் வாங்குவார்.தமிழில் கூட சூப்பர் டீலக்ஸ், வேலைக்காரன், புஷ்பா, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.


இறுதியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான மாமன்னன் திரைபபடத்தில்  ரத்னவேலு என்ற கதாபாத்திரத்தில் நடித்து  பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகி இருக்கிறார். 

இந்நிலையில் பஹத் பாசிலை இயக்குநர் மோகன்.ஜி நடிக்க கூப்பிட்டதாகவும், அதனால் தான் பஹத் பேஸ்புக் கவர் படத்தை நீக்கி, மோகன் போன் நம்பரை ப்ளாக் செய்து விட்டார் என ஒரு செய்தி நேற்று வைரல் ஆகி இருந்தது.இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி மோகன்.ஜி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். 


அது பொய்யான செய்தி என்று குறிப்பிட்டு, தவறான செய்தி வெளியிட்ட வார இதழையும் அவர் கடுமையாக விமர்சித்து வீடியோவில் பேசி இருக்கிறார். இதனால் பஹத் அடுத்து யாருடைய படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement