தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து பிரபல்யமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை அசின். இவர் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம்.குமரன் சன் ஒவ் மகாலக்ஷ்மி என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.இப்படத்தின் மூலம் மக்களின் ஆதரவைப் பெற்றார்.
தொடர்ந்து சிவகாசி ,கஜினி ,வரலாறு எனப் பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். பின்னர் சில காலம் படவாய்ப்புக் குறைந்தததை அடுத்து சினிமாவை விட்டு விலகிய இவர் திருமண பந்தத்தில் இணைந்த கொண்டதோடு இவருக்கு ஒரு மகளும் உள்ளார்.
இவரது கெரியரில் மிகவும் முக்கியமான திரைப்படமாக அமைந்தது தான் கஜினி. இப்படத்தினை இயக்குநர் முருகதாஸ் இயக்கியிருந்ததோடு சூர்யா இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.இப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளிலும் உருவாகி 100க்கு மேல் வசூல் சாதனை செய்தது.
ஹிந்தி கஜினியை பார்த்த தொழில் அதிபர் ராகுல் சர்மாவின் குடும்பத்தார், இப்படி ஒரு பெண் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று கூறினாராம். கடைசியில் அசினையே திருமணம் செய்து கொண்டாராம் ராகுல். மேலும் இன்றைய தினம் அசின் தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதால் ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் முக்கியமாகும்.
Listen News!