• May 04 2024

குயின் சீசன் 2 வெப் தொடரில் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்த தனுஷின் மாஜி அண்ணி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்யா கிருஷ்ணன். ஆரம்பத்தில் அம்மன் படங்களில் நடித்து வந்த இவருக்கு படையப்பா திரைப்படம் தான் இவரை சிறந்த நடிகையாக அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கின்றார்.

மேலும் தற்பொழுது பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாப்பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதால் ஸ்ரோங் லேடி என்றும் அழைக்கப்பட்டு வருகின்றார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் சிறந்த நடிகையாக வலம் வருகின்றார்.

இவரது நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான வெப் தொடர் தான் குயின். இந்த தொடரானது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இதில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதா வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

கௌதம் மேனன்- பிரசாந்த் முருகேசன் ஆகியோர் இணைந்து இயக்கிய இத் தொடரின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் இவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகை சோனியா அகர்வால் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement