• May 08 2024

முதன் முறையாக இளையராஜா இசையில் தனுஷ் பாடிய பாடல்! குஷியில் ரசிகர்கள்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் விடுதலை படத்தை சுமார் இரண்டு வருடமாக எடுக்கப்பட்டு, இரண்டு பாகங்களாக வெளியாக காத்திருக்கிறது. மேலும், படத்தின் இரு பாகங்களுக்கும் இளையராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. 2 பாகங்களாக வெளியாக உள்ள இந்த படம், ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. 

படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தின் முதல் பாடல் பிப்ரவரி 8 -ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளாராம்.

இது உண்மை என்றால், முதல் முறையாக இளையராஜா இசையில் தனுஷ் பாடியுள்ளார் என்று கூறப்படுகிறது. நடிகர் தனுஷ் இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகர். அவரது பாடலை அடிக்கடி, மேடையில் பாடுவது உண்டு. இந்த நிலையில், இளையராஜா இசையில் தனுஷ் பாடியுள்ளார் என்ற செய்தி ரசிகர்களை குஷியில் மூழ்க வைத்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement