• Mar 19 2024

வெளியாகிய அரை மணிநேரத்தில் லியோ படத்தின் டைட்டில் ப்ரோமோவை இத்தனை வியூவர்ஸ் பார்த்திருக்கின்றார்களா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

வாரிசு படத்தை முடித்த கையோடு இப்போது தனது 67வது பட வேலைகளையும் தொடங்கிவிட்டார் விஜய். லோகேஷ் கனகராஜுடன் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளார்.இப்படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன் என பலர் நடிக்கிறார்கள், படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட வீடியோவை படக்குழுவே வெளியிட ரசிகர்களால் வைரலாகி வந்தது.

த்தோடு த்ரிஷாவும் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வந்தார்கள்.அத்தோடு படக்குழு இரண்டாம் கட்டப் படப்பிடிப்பிற்காக காஷ்மீருக்காக தனி விமானத்தில் சென்றுள்ளனர். இது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் என்பன வெளியாகிக் கொண்டிருக்கின்றது.


அந்த வகையில் தற்பொழுது தளபதி 67 படத்திற்கு லியோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.அத்தோடு இப்படம் வருகின்ற 10ம் மாதம் 19ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இந்த நிலையில் தற்பொழுது வெளியாகிய டைட்டில் ப்ரோமோ வெளியாகிய அரை மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதனால் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement