• Dec 04 2023

விஜய்யின் லியோ படத்திலிருந்து நீக்கப்பட்ட முக்கிய காட்சி- வைரலாகும் வீடியோ

stella / 1 month ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.


இதையடுத்து இப்படத்தின் வெற்றி விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை நடைபெறவுள்ளது. பேருந்தில் ரசிகர்கள் விளையாட்டரங்கிற்கு வர தடை மற்றும் 300 கார்களுக்கு மட்டுமே அனுமதி போன்ற பல்வேறு நிபந்தனைகளுடன் வெற்றிவிழாவிற்கான தடையில்லா சான்றை காவல்துறை வழங்கியது.

இப்படத்தில் மன்சூர் அலி கான் சொன்ன பிளாஷ்பேக் கதை பொய்யாக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது.அதை லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டியிலும் கூறி இருந்தார். அந்த கதை பொய் என சொல்ல ஒரு வசனம் மன்சூர் பேசி இருப்பார், ஆனால் அதை நீக்கிவிட்டோம் எனவும் லோகேஷ் கூறி இருந்தார்.இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement