• Dec 05 2023

மாயா Use பண்ண Word ரொம்ப Wrong ஆன Word- ஓபனாகப் பேசிய நடிகை வனிதா விஜயகுமார்

stella / 1 month ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஆரம்பித்த நாளிலிருந்து பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது. முதல் வாரத்தில் நடந்த நாமினேஷன் படலத்தில், நடிகை அனன்யா ராவ் குறைவான வாக்குகளுடன், முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்டார். 

இவரை தொடர்ந்து பவா செல்லதுரை அதே வாரம் வெளியேறியதால் இரண்டாவது வாரம் அனைத்து போட்டியாளர்களும் எவிக்ஷனில் இருந்து தப்பினர்.இதை தொடர்ந்து மூன்றாவது போட்டியாளராக விஜய் வர்மா வெளியேற்றப்பட்ட நிலையில், கடந்த வாரம் யுகேந்திரன் மற்றும் வினுஷா ஆகிய இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.


அது மட்டும் இன்றி, அர்ச்சனா, கானா பாலா, தினேஷ் கோபால சுவாமி, அன்ன பாரதி, பிராவோ ஆகிய 5 பேர் பிக்பாஸ் வீட்டின் உள்ளே வயல் கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்துள்ளனர். இதனை அடுத்து வைல்ட் காட் என்ட்ரியாக நுழைந்தவர்களை ஸ்மோல் ஹவுஸ் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் வைல்ட் காட் என்ரியாக நுழைந்த அர்ச்சனா தன்னை யாரும் வரவேற்கவில்லை, எதிரியாக இருந்தாலும் வீட்டுக்கு வருபவர்களை வரவேற்கனும் அது தானே நம்முடைய பண்பாடு என்று சொல்ல, அதற்கு மாயா அர்ச்சனாவை நக்கலாகப் பேசினார். இதனால் அர்ச்சனா அழுதார். எனவே இது குறித்து பிக்பாஸ் பிரபலமான வனிதா விமர்சித்துள்ளார்.

அதாவது மாயா Use பண்ண Word ரொம்ப Wrong ஆன Word அப்படி பேசியிருக்க கூடாது.இது பிக்பாஸ் வீடு அப்பிடித் தான் இருக்கும் அர்ச்சனா இதுக்காக எல்லாம் அழக்கூடாது என்று தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement