• Apr 16 2026

ரவுடிகளிடம் இருந்து தப்பித்த தர்சினி! சிக்கிய ஈஸ்வரி டீம்? சக்தியிடம் கலங்கி நிற்கும் கதிர்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. 

குறித்த ப்ரோமோவில்,  தர்ஷினி ரவுடிகளிடம் இருந்து தப்பி ஓட, ரவுடிகளும் அவரை துரத்தி தேடி வருகின்றனர். 

மறுபக்கம், ஹாஸ்பிடலில் சக்தியிடம் பேசிய கதிர்,  நான் எவ்வளவு தப்பு பண்ணி இருக்கேன் எல்லாத்தையும் அந்த மனுஷனுக்காக தானே செய்தன் என கலங்கி நிற்கிறார். 


இதை தொடர்ந்து, பெண்கள் கையில் தர்ஷினி எழுதிய லெட்டர் கிடைக்க அதில் கொடுமைப்படுத்துறாங்க என எழுதி இருப்பதை பார்த்து எல்லாரும் பதறிப் போகிறார்கள்.

பிறகு தர்ஷினி இருந்த இடத்திற்கு அவர்கள் தேடி ஓட, இன்னொரு பக்கம் தர்ஷினி இவர்களை பார்த்து விடுவது போல் ப்ரோமோ காட்டப்படுகிறது. இது தான் இன்றைய நாளுக்கான ப்ரோமோ.

Advertisement

Advertisement