சின்னத்திரையில் சீரியல் நடிகையாக அறிமுகமாகி, அதன் பின்னர் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தவர் தான் நடிகை தர்ஷா குப்தா. தொடர்ந்து தனது நடிப்பு மற்றும் கவர்ச்சியான போட்டோஷூட்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
சினிமாவில் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு மேலும் கவனம் பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தர்ஷா குப்தாவுக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்ததுடன், அவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் அடிக்கடி வைரலாகி வருகின்றன.
குறிப்பாக, தர்ஷா குப்தா தொடர்ந்து வெளியிட்டு வரும் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விதவிதமான உடைகள் மற்றும் வித்தியாசமான லுக்குகளில் போட்டோஷூட் நடத்தி, அவற்றை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன.
இந்த புகைப்படங்களில் தர்ஷா குப்தாவின் ஸ்டைலான தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கமெண்ட் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!