• May 08 2024

டான்சர் ரமேஷின் 2-வது மனைவியின் பரபரப்பு audio...நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தெருக்களில் நடனமாடி அதன் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் டான்ஸர் ரமேஷ். இவர் இதனைத் தொடர்ந்து ஷு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டவர்.சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற அஜித் குமாரின் துணிவு திரைப்படத்திலும் தோன்றி இருந்தார்.


இந்த நிலையில், தனது பிறந்த நாள் தினமான நேற்று (27.01.2023) டான்சர் ரமேஷ் மறைந்துள்ளார். இது தொடர்பாக வெளியாகி இருந்த முதற்கட்ட தகவல்களின் படி, சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த டான்சர் ரமேஷ் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதனிடையே, ரமேஷ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது தாயார் மற்றும் முதல் மனைவி ஆகியோர் தெரிவித்திருந்தனர். இதனால், ரமேஷ் மரணத்தில் மர்மம் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.


அத்தோடு முதல் மனைவி உட்பட அவரது உறவினர்கள் சிலரும் இரண்டாவது மனைவி தான் காரணம் என கூறப்பட்ட நிலையில் பிரபல தனியார் ஊடகம் ஒன்று நேரடியாக அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது...ஹலோ...ரமேஸின் திடீர் மறைவு பற்றி கூறுங்கள் என கேட்ட போது ...நாங்க பயந்து பயந்து சுத்திக்கொண்டு திரிகின்றோம்.6 பேர் பேட்டி எடுக்கிறம் எடுக்கிறம் எண்டு திரியிறாங்க...எங்களுடைய உயிருக்கு உத்தரவாதம் கிடையாது..யாரும் எங்களுடைய உயிருக்கு உத்தரவாதம் கொடுத்து அதாவது வீடு ஏதும் கொடுத்து போலீஸ் பாதுகாப்பு கொடுத்து இருந்தால் நாங்க பேட்டி கொடுக்கின்றோம்.இல்லன்னா நாங்க யாருக்கும் பேட்டி கொடுக்கிற மாதரி இல்லை..நாங்க பேட்டி கொடுத்தால் மட்டும் அவர் திரும்பி வரப்போவது இல்லை.நாங்க பயந்து போய் இருக்கிறம்...” என தெரிவித்துள்ளார்.


இந்த ஆடியோ இணையத்தளத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement