• May 05 2024

அடடே செம்பருத்தி சீரியல் நடிகையின் தம்பியா இது?-எப்படி மாறிட்டார் என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஷு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அதிகளவிலான மக்கள் மனதை வென்ற சீரியல் செம்பருத்தி. இந்த சீரியல் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக 05 ஆண்டுகளைக் கடந்து விட்ட நிலையிலும் இன்றும் மக்களிடையே அன்பினையும் பேராதரவினையும் பெற்று ஒளிபரப்பாகி வருகின்றது.

தற்போது உள்ள டாப் சீரியல்களில் ஒன்றாக இருக்கின்ற செம்பருத்தி சீரியலானது முழுக்க முழுக்க காதலை பின்னணியாகக் கொண்ட தொடர் ஆகும். அத்தோடு இந்த சீரியல் தெலுங்கு மொழியில் வெளிவந்த "முத்த மந்தாரம்" என்ற தொடரின் தழுவல் எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் செம்பருத்தி சீரியலில் ஷபானாக்கு தம்பியாக நடித்திருந்தவர் நடிகர் சஞ்சய். எனினும் இந்த சீரியலில் ஏற்பட்ட கதை மாற்றம் காரணமாக இவரின் கதாபாத்திரம் இடையில் நிறுத்தப்பட்டது. இச்சீரியலில் மட்டுமல்லாது நடிகர் சஞ்சய் A.R. முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த "ஸ்பைடர்" என்ற படத்திலும் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் சஞ்சய் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப் போயுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் செம வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement