• May 09 2024

பிக்பாஸ் ரூல்ஸை பிரேக் பண்ணிய கூல் சுரேஷ்- இவரும் ஸ்மோல் வீட்டிற்கு போகப் போகின்றாரா?- அதுக்குள்ள இப்படிப் பண்ணிட்டாரே?

stella / 7 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக தொடங்கியது, இந்த நிகழ்ச்சியில்18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் இந்த சீசனின் கேப்டனாக விஜய் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை கவராத 6 பேர் சுமால் ஹவுசிற்கு அனுப்பப்பட்டனர்.

வழக்கமாக முதல் வாரத்திற்குப் பிறகுதான் போட்டியாளர்கள் ஒருவரையொருவர் நன்றாக தெரிந்து கொள்வார்கள் என்பதால்,முதல் வாரம் நாமினேஷன் இருக்காது. ஆனால் இந்த சீசனில் இரு வீடுகள் மற்றும் இரட்டை நாமினேஷன் முறை அமுலுக்கு வந்துள்ளதால், முதல் நாளே நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கியது.


இதில், அதன்படி ஐஷு, அனன்யா, ரவீனா, ஜோவிகா, யுகேந்திரன், பிரதீப் மற்றும் பவா செல்லதுரை ஆகிய 7 பேர் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். நாமினேஷன் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் முதல் போட்டியாளர் யார் என்பது பற்றிய விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடந்து வருகின்றன.

இது ஒருபுறம் இருக்க சிமோல் ஹவுஸ்ஸில் இருக்கும் போட்டியாளர்கள் தான் பெரிய வீட்டில் இருப்பவர்களுக்கும் சமைக்க வேண்டும். அப்படி நேற்றைய தினம் ஸ்மோல் பிக்பாஸில் இருப்பவர்களுக்கு உதவி செய்ததன் காரணமாக விசித்திராவும் யுகேந்திரனும் சிமோல் பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில் இன்று கூல் சுரேஷும் ஸ்மோல் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு சமைப்பதற்காக உதவி செய்து விட்டார். இதனால் கூல் சுரேஷும் ஸ்மோல் வீட்டிற்கு போவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement