தமிழ் திரையுலகின் 2016ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகயாக நடிக்க வெளிவந்த திரைப்படம் தான் பிச்சைக்காரன்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் வெளியான இப்படத்திற்கு செம வரவேற்பு கிடைத்தது.
அத்தோடு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பிய போது டாப் TRP எல்லாம் பெற்றது, இப்போதும் அப்படத்தை புதியது போல் பார்க்கும் ரசிகர்கள் உள்ளார்கள். இப்படம் மொத்தமாக ரூ. 42.25 கோடி வரை வசூல் சாதனையும் செய்தது.
முதல் பாக வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2ம் பாகத்தை இயக்கி, நடித்து, இசையமைத்தும் வருகிறார்.
மேலும் இப்பட படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனிக்கு பெரிய விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
இப்போது பிச்சைக்காரன் 2 பட போஸ்டர் வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் இது ஆங்கிய படமான The Lobster படத்தின் போஸ்டர் காப்பி போல் உள்ளதே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Listen News!