• May 19 2024

தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூர்யாவுக்கு வாழ்த்துக்கள்- ரஜினிகாந்த் போட்ட முக்கிய டுவிட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2020ம் ஆண்டு பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகிய திரைப்படம் தான் சூரரைப் போற்று.இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்ததோடு நடிகர் சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.கேப்டன் கோபிநாத்தின் பயோபிக்காக இந்த படம் உருவாக்கப்பட்டது.

சாதாரண மக்களுக்கும் விமான பயணத்தை சாத்தியமாக்க குறைந்த கட்டணத்தில் விமான பயணம் என்பதை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. சூர்யாவின் 2டி நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்திருந்தது. இப்படம் வெளியாகி இதுவரை 35 க்கும் அதிகமான சர்வதேச விருதுகளை வென்றது.

இந்நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகளில் சூரரைப் போற்று படம் முக்கிய பிரிவுகளில் 5 விருதுகளை வென்றது. இந்த படத்தில் நடித்த சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சூர்யா மற்றும் சூரரைப் போற்று டீமுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூர்யாவுக்கும் ,சூரரைப் போற்று பட இயக்குநர் மற்றும் விருது பெறும் திரையுலகக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும் என ரஜினி குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement