• May 04 2024

டிடி ரிட்டர்ன்ஸ் வெற்றியை படக்குழுவினருடன் இணைந்து கொண்டாடிய சந்தானம்- குவியும் வாழ்த்துக்கள்

stella / 9 months ago

Advertisement

Listen News!


சின்னத்திரையில் இருந்து கெரியரை ஆரம்பித்து தற்பொழுது வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகர் தான் சந்தானம். காமெடியனாக பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்த இவர் சமீபகாலமாக கதாநாயகனாக நடித்து வருகின்றார்.

அதன்படி, தில்லுக்கு துட்டு, சர்வர் சுந்தரம், சக்க போடு போடு ராஜா, டகால்டி, பிஸ்கோத், பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி, குலுகுலு, ஏஜென்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். ஆனாலும், இவைகளில் ஒருசில படங்கள் மட்டுமே சந்தானத்துக்கு ஹீரோவாக அடையாளம் கொடுத்தது. 


 இந்நிலையில், கடந்த வாரம் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் சந்தானத்துக்கு தரமான கம்பேக் கொடுத்துள்ளது. பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் சந்தானத்துடன் ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், முனிஷ்காந்த் என பெரிய காமெடி பட்டாளமே நடித்திருந்தது. அதிகம் எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ், காமெடியில் அதகளம் செய்துள்ளது. 

இதனால் முதல் நாளில் இருந்தே படத்திற்கு சிறப்பான வரவேற்புக் கிடைத்துள்ளது. படம் வெளியாகி மூன்று நாட்களில்  8 முதல் 10 கோடி வரை வசூலித்துள்ளதாம். இனி வரும் நாட்களிலும் டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நீண்ட நாட்களாக சூப்பர் ஹிட் படத்துக்காக காத்திருந்த சந்தானம், டிடி ரிட்டர்ன்ஸ் வெற்றியால் உற்சாகமாக காணப்படுகிறார். 


இதனையடுத்து டிடி ரிட்டர்ன்ஸ் வெற்றியை படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார். தயாரிப்பாளர், இயக்குநர் உட்பட டிடி ரிட்டன்ஸ் படக்குழுவினர் சந்தானத்துக்கு மாலை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை சந்தானம் டிவிட்டரில் ஷேர் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement