• May 18 2024

பாலிவூட் சினிமாவில் கால் பதிக்கவுள்ள இசையமைப்பாளர் அனிரூத்- குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் அனிரூத். இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மூன்று திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகினார்.

அதனைத் தொடர்ந்து எதிர்நீச்சல் ,டேவிட், வணக்கம் சென்னை, மான் கராத்தே, ரெமோ, வேதாளம், நானும் ரௌடி தான், விவேகம் ,வேலைக்காரன் ,கத்தி, தானா சேர்ந்த கூட்டம், பேட்ட, தர்பார் ,பீஸ்ட் ,டாக்டர், டான் எனப் பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இது தவிர தற்பொழுது திருச்சிற்றம்பலம் தலைவர் ,169, ஏ.கே 62 ஆகிய படங்களுக்கு இசையமைப்பதற்காக காத்திருக்கின்றார். இது தவிர பல பாடல்களையும் பாடியிருக்கிறார் என்பதும் முக்கியமாகும் .

இவ்வாறு தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிஸியான இசையமைப்பாளராக வலம் வரும் இவர் அடுத்ததாக பாலிவூட்டிலும் கால் பதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் யாருடைய படத்தில் இசையமைப்பதற்காக கமிட்டாகியுள்ளார் என்ற விபரம் வெளியாகவில்லை.

இவருக்கு திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement