மீனாவின் கணவனுக்கு பெஸ்ட் ட்ரீட்மென்ட் கொடுக்க சொன்ன சி எம்- தகவல் வெளியிட்ட ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்

தென்னிந்திய திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், தனது நடிப்புத் திறமையினால் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை மீனா. தமிழ் சினிமாவில் இவரது நடிப்பிற்கும், அழகிற்கும் மயங்காத இளைஞர்களே இல்லை என்று தான் கூறலாம். அந்தளவிற்கு மீனாவின் அழகிற்கு என்றே ஒரு ரசிகர் கூட்டமே உண்டு.

கண்ணழகி என்று செல்லமாக அழைக்கப்படுகின்ற இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த், பிரபு, அஜித், பிரபுதேவா உள்ளிட்ட பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவ்வாறாகத் தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்து வந்த நடிகை மீனா 2009-ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரான வித்யாசாகர் என்பவரைத் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகினார். இவர்களுக்கு தற்போது நைனிகா என்ற அழகான மகள் ஒருவரும் உண்டு. இவரும் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் சில மாதங்களிற்கு முன்னர் இருந்தே உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த மீனாவின் கணவர் வித்யாசேகர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இதற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளரான ராதாகிருஷ்ணன் IAS மீனாவின் வீட்டிற்கு நேரில் வந்து வித்யாசாகரின் உடலிற்கு அஞ்சலி செலுத்தியிருந்தார். அப்போது அவர் பத்திரிக்கையாளரிடம் பேசும் போது “வித்யாசாகரின் இந்த மரணம் எனக்கே ஷாக்கிங் ஆக தான் உள்ளது. ஜனவரி மாதம் முதல் தான் அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவருக்கு பெஸ்ட் ட்ரீட்மென்ட் அளிக்க வேண்டும் என CM கூறியிருந்தார். இதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்து வந்தோம்” எனக் கூறியிருந்தார்.

மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில் “இன்று பகல் 2.30 மணியளவில் பெசன்ட் நகர் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது. மீனாவின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை மாநகராட்சி சார்பில் நாங்கள் செய்து வருகின்றோம்” எனவும் தெரிவித்திருந்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்