Monday, August 8, 2022

இந்த செய்தி எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது-மீனாவின் கணவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்த நடிகர் விஷால்

கண்ணழகி என்றால் அது நடிகை மீனா. அவரின் அழகிய கண்ணுக்கு என்றே சினிமாவில் அநேக ரசிகர்கள் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் பல நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் நடிகை மீனா. தனது நடிப்பினால் பல ரசிகர்களை கவர்ந்தவர். குறிப்பாக 90S ஹிட்ஸின் கனவு கன்னியாக இருந்தவர்

இவர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுடன் பல படங்களில் நடித்தார்.இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் கலக்கி வந்தார்.இவ்வாறு சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்து நடித்து வந்தார்.

இவர் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை 12 பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வித்யாசாகருக்கு இவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமண வரவேற்பு சென்னையில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மஹாலில் நடைபெற்றது.இவ்வாறு சந்தோஷமாக வாழ்ந்த அந்தத் தம்பதியினருக்கு நைனிகா என்ற அழகான பெண் குழந்தையும் உள்ளார்.

இந்த நிலையில் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக இவர் சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் நேற்று இரவு ஒன்பதரை மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இவருடைய இந்த எதிர்பாராத இழப்பிற்கு உறவினர்கள் நண்பர்கள் திரைப்பிரபலங்கள் என அனைவரும் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஷால் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமாக உள்ளது.மீனாவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று கூறி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்