• May 05 2024

திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை- வெளியாகிய வெடிங் போட்டோஸ்

stella / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஆரம்பித்த சில நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.அத்தோடு இந்த சீரியல்  TRPயில் முதல் இடத்தை பிடித்துள்ளது.


இந்த சீரியல் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது.அந்த வகையில்தெலுங்கு சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் ஹர்ஷலா.இவர் சன் டிவியில் சுமார் 1000 எபிசோடுகளுக்கு மேல் ஓடிய சந்திரலேகா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


பிருங்கதா பென்னேரி, நானு மாட்டு நானு, சுக்கி, வரஸ்தாரா, ரோபோ ஃபேமிலி, சஞ்சு மாட்டு மற்றும் காவேரி போன்ற பல கன்னட சீரியல்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.


அண்மையில் ஹர்ஷலாவுக்கு தொழிலதிபர் அரவிந்த் என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. தனது திருமண புகைப்படத்தை நடிகையே தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார்.இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement