• May 03 2024

'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தின் 'சின்னஞ்சிறு நிலவே' பாடல் ரிலீஸ்- எப்படி இருக்கு என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

முதல் பாகத்தின் வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.மேலும் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. 


இந்தப் படத்தின் ப்ரமோஷனுக்காக படக்குழு இன்று கொச்சினுக்கு சென்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களையும் நடிகர்கள் தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.இந்நிலையில், 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'சின்னஞ்சிறு நிலவே' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இளங்கோ கிருஷ்ணன் வரிகளில் ஹரிசரண் பாடியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.



Advertisement

Advertisement

Advertisement