• Jan 18 2025

சென்னை Happy Street பாடகர் கைது! இளம்பெண் மீது பாலியல் புகார்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

பாடகர் குரு குகன், சென்னையில் வாரந்தோறும் நடக்கும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகளில் பாடி பிரபலமடைந்தவர். மேலும், தனியார் தொலைக்காட்சிகளிலும் பங்கேற்று பாடியுள்ளார். இந்நிலையில் குகன் மீது இளம்பெண் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.


அதில், கடந்த மே மாதம் நடைபெற்ற ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குகன், தம்மிடம் செல்போன் நம்பர் வாங்கி நட்பாக பழகி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் தம்மை திருமணம் செய்துகொள்வதாக கூறி நெருங்கி பழகிவந்த நிலையில் தான் கர்ப்பமடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.


இதனை அறிந்த குரு குகன், கருவை கலைக்க கூறி வற்புறுத்தியதால் தாம் கருவை கலைத்ததாகவும், பின்னர் தம்மை திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து குருகுகனின் பெற்றோரிடம் முறையிட்ட போது ஜாதி தடையாக இருப்பதாக சொல்லிவிட்டார்களாம். இதனால் அந்த பெண் தற்போது போலீஸில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர். இதனால் தற்போது பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement

Advertisement