• Apr 14 2026

ச்சச.. ஒரு ஆம்பள கூட அத பண்ணல.. ரொம்ப பீல் பண்ணினேன்! மாயா கிருஷ்ணன் ஃபயர் மூட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து சர்ச்சைக்குரிய போட்டியாளராக காணப்பட்டவர் தான் மாயா கிருஷ்ணன். இவர் மேடை நாடகங்கள் நடிப்பதில் ஆர்வம் கொண்டவராக காணப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் மாயா மற்றும் பூர்ணிமாவின் நட்பு பலராலும் ரசிக்கப்பட்டது.

பிக் பாஸ் சீசன் 7 பங்கு பற்றிய போட்டியாளரான பிரதீப் ஆண்டனி அந்த சீசனில் டைட்டில் வின் பண்ணுவார் என ஆரம்பத்திலேயே கணிக்கப்பட்டது.. ஆனால் மாயா மற்றும் அவரின் புல்லி கேங் பிரதீப் மீது புகுத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் உலக நாயகன் கமலஹாசனால் கூட அவர் தீர விசாரிக்கப்படாமல் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார்.

பிக் பாஸ் வரலாற்றிலேயே இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரதீப் வெளியே போனதுக்கு முக்கிய காரணம் மாயா, பூர்ணிமா தான் என்று சர்ச்சைகள் வலுத்தது. இறுதியில் மாயா வெற்றி கோப்பையை கைப்பற்றுவார் என்று ஒரு அணியினர் பாடுபட்ட போதிலும், அவர் வெற்றி பெறவே கூடாது என்று அவருக்கு எதிராகவும் இன்னொரு அணியினர் பாடுபட்டார்கள்.


இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 ஐ மையமாகக் கொண்டு மாயா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றியும் விஜய் சேதுபதி பற்றியும் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,

Advertisement

Advertisement