• Jan 19 2025

நீங்க நெகட்டிவா பேசுறதும் எனக்கு மோட்டிவேஷனா இருக்கு.! காத்திருந்து பதிலடி கொடுத்த தனுஷ்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் தான் நெப்போலியன். இவர் தனது மகன் தனுஷுக்கு ஜப்பானில் திருமணம் செய்து வைத்தார். இதற்காகவே அமெரிக்காவில் இருந்து ஜப்பானுக்கு குடும்பத்தோடு கப்பலில் பயணம் செய்தார். தனுஷின் திருமணத்தை பலரும் விமர்சனம் செய்தார்கள். ஆனால் அவர் எதையும் கண்டு கொள்ளாமல் தனது  மகனின் சந்தோஷத்தை பூர்த்தி செய்து வைத்தார்.

பாரதிராஜாவால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நெப்போலியன் பிற் காலத்தில் அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார். இவருடைய மூத்த மகனுக்கு தசைச் சிதைவு நோய் ஏற்பட்டது. இதனால் அவர் பல சிகிச்சைகளை மேற்கொண்டு அது பயனளிக்காத நிலையில் அமெரிக்காவில் செட்டில் ஆனார்.

இதை தொடர்ந்து தனுஷ் திருமண வயதை எட்டவே அவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார். அதன்படி பெண்பார்த்து நிச்சயதார்த்தம் செய்து ஜப்பானில் திருமணமும் செய்து வைத்தார். தனுஷால் விமானத்தில் பயணிக்க முடியாது என்பதால் கப்பலில் சென்றுள்ளார்.


இன்னொரு பக்கம் தனுஷுக்கு ஏன் இப்போது திருமணம் என்று இஷ்டத்துக்கு விமர்சித்தார்கள். அவரால் ஒரு பெண்ணின் வாழ்க்கை சீரழிய போகின்றது, தாம்பத்திய உறவிலும் ஈடுபட முடியாது என்று வாய்க்கு வந்தவாறு பேசினார்கள். இறுதியில் நெப்போலியன் மனமுருகி வீடியோ ஒன்றையும்  வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், தற்போது நெப்போலியனின் மூத்த மகன் ஆன தனுஷ் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது திருமணத்திற்கு பலரும் பாசிட்டிவாக பேசியிருந்தீர்கள். அதேபோல நெகட்டிவ் ஆக சொல்லி இருந்தவர்களின் கமெண்ட்ஸும் என்னை பாதிக்கவில்லை. அது எனக்கு மோட்டிவேஷனாக தான் இருந்தது என்று பதில் அளித்துள்ளார்.

Advertisement

Advertisement