• May 12 2024

பேக்கப் சொன்ன லோகேஷ்... விஜய் திரிஷா முத்த காட்சி விவகாரம்... உண்மையை உடைத்த பிரபலம்...

subiththira / 6 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா 15 ஆண்டுகளுக்கு பிறகு லியோ படத்தின் மூலம் மீண்டும் இணைந்து நடித்து ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளனர். இந்நிலையில் லியோ திரைப்படத்தில் இருந்த முத்த காட்சி குறித்து சுவாரஷ்யமான தகவல் வெளியாகியுள்ளது.  


விஜய்க்கு திரிஷா ஜோடி சேர்ந்துள்ளனர். இப்படத்தில் விஜய் - திரிஷா இடையே இடம் பெற்றுள்ள ரொமான்ஸ் காட்சிகள் ரசிக்கும் படி தான் அமைந்து இருந்தது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பேசிய DOP மனோஜ், லியோ படத்தில் இருக்கும் முத்த காட்சி குறித்து பேசியுள்ளார்.


அதில் அவர் கூறுகையில், படத்தில் முத்த காட்சி இருக்கிறது என்று எங்களுக்கு தெரியும் ஆனால் மௌனராகம் படத்தின் டயலாக் அங்கு வைப்பார் என்று யாருக்கும் தெரியவில்லை. அந்த முத்த காட்சியை  எடுத்தவுடன் லோகேஷ் கட் சொல்லாமல் சந்தோஷத்தில் பேக்அப் சொல்லிவிட்டார் என்று படத்தின் DOP மனோஜ் கூறியுள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement