• Sep 21 2023

கவினின் Wedding Reception இல் குவிந்த பிரபலங்கள்...அட இவங்க எல்லாம் போய் இருக்காங்களா..? வீடியோ இதோ..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் சீரியல் மற்றும் துணை நடிகராக திகழ்ந்து வந்த கவின் உதவி இயக்குநராகவும் பணியாற்றி இருக்கின்றார். இவ்வாறாக பன்முகத் திறமை கொண்ட இவர் கடந்த பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்தார். 


அதுமட்டுமல்லாது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக போட்டியாளரான இலங்கை பெண் லாஸ்லியாவை காதலித்து அதன்பின் பிரிந்தார். பிக்பாஸிற்குப் பின் லிஃப்ட், டாடா போன்ற படங்கள் வெளியாகி கவினுக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. 


தற்போது தனி ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று வரும் கவின் சமீபத்தில் தனது நெருங்கிய தோழியும், பள்ளியில் பணியாற்றி வருபவருமான மோனிகா என்பவரை கரம் பிடித்தார். இந்நிலையில் திருமணத்தை தொடர்ந்து தற்போது தனது வெட்டிங்க reception வீடியோவினை கவின் வெளியிட்டிருக்கின்றார். அதில் இயக்குநர் நெல்சன், தொகுப்பாளர் கோபிநாத், நடிகர் சிவகார்த்திகேயன் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement