• Sep 21 2023

போதைப்பொருள் வழக்கில் நேரில் ஆஜராக கூறி நடிகை வரலட்சுமிக்கு சம்மன்... பரபரப்பில் திரையுலகம்..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அந்தஸ்தோடு திரையுலகில் வாரிசு நடிகையாக அறிமுகமானவர் வரலட்சுமி. தந்தையைப் போலவே படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் வரலட்சுமி தற்போது எதிர்பாராதவிதமாக சிக்கலில் சிக்கியுள்ளார்.

  

அதாவது கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப் பொருட்கள், ஆயுதங்கள் என்பவற்றைக் கடத்திய வழக்கில் ஆதிலிங்கம் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். குறித்த வழக்கில் ஏற்கெனவே இலங்கை தமிழர்களுடன் இணைத்து 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் 14-ஆவது நபராக ஆதிலிங்கமும் அதிரடியாக கைதாகியுள்ளார்.


இவர் நடிகை வரலட்சுமியின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே போதைப் பொருட்கள், ஆயுத கடத்தல்கள் மூலம் கிடைத்த பணத்தை ஆதிலிங்கம் திரைத்துறையில் முதலீடு செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இதுகுறித்த மேலதிக தகவல்களை பெறும் நோக்கில்,  வரலட்சுமிக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த விடயமானது தற்போது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement