• Sep 26 2023

கருப்பு பணத்தை பதுக்கிறவங்களுக்கே இவ்வளவு கொழுப்பு இருக்கலாமா?- ரஜினிக்கு எதிராக புது சர்ச்சையைக் கிளப்பிய blue-sattai-maran

stella / 1 month ago

Advertisement

Listen News!


ஜெயிலர் ரிலீஸுக்கு முன்னதாக ரஜினிகாந்த் இமயமலை சென்றார். பாபா ஜி குகையில் தியானம், ஆன்மீக தலங்களின் விசிட்டுக்கு பிறகு நேற்றிலிருந்து அரசியல் தலங்களுக்கு விசிட் அடித்துவருகிறார்.

மறுபுறம் இவர் நடிப்பில் வெளியாகிய ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்று வருகின்றது. இப்படியான நிலையில் ரஜினி உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்ததால் பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றார்.ஜெயிலர் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், ரஜினி இப்படி நடந்துகொண்டது தமிழ் ரசிகர்களை பெரிதும் அதிர்ச்சிக்குட்படுத்தியுள்ளது.


இந்த சம்பவத்தை வைத்து ப்ளூ சட்டை மாறனும் ரஜினியை கலாய்த்துள்ளார்.இதனால் ரசிகர்கள் அஜித் அமிதாப்பச்சன் காலில் விழுந்து அஜித் ஆசி வாங்கிய போட்டோவை ஷேர் செய்து, இதெல்லாம் கண்ணுக்குத் தெரியாதா..? என்று ட்ரோல் செய்து வந்தனர்.இதற்கு ப்ளூ சட்டை மாறனும் பதிலடி கொடுத்துள்ளார்.

அதாவது "அமிதாப் கலைத்துறையில் சீனியர், வயதில் பெரியவர், அஜித்தை வைத்து உல்லாசம் படமெடுத்த தயாரிப்பாளர். அந்த மரியாதைக்கு காலில் விழுந்து வணங்குகிறார்." "இதப்போயி கபாலி மேட்டரோட மேட்ச் பண்ணாதீங்க. அஜித்தின் படங்கள் பிடிக்காமல் போகலாம். ஆனா தனிமனித ஒழுக்கத்துல அவருக்கு இணையான ஒரு முன்னணி ஸ்டார் இங்க கிடையாது. 


கருப்பு பணத்தை பதுக்கறவங்களுக்கே இவ்வளவு கொழுப்பு இருந்தா.. நேர்மையா வரி கட்டுற இவருக்கு எவ்வளவு இருக்கும்.? ஆகவே.. Do not dare to touch Ajith on such issues" என பதிவிட்டுள்ளார். அஜித் குறித்து ப்ளூ சட்டை மாறன் கெத்தாக பதிவிட்டுள்ள இந்த டிவிட்டை, தல ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement