• Oct 09 2024

அசிங்கப்படுத்திய விஜயா.. மீனா செய்த காரியம், ஷாக் கொடுத்த முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் விஜயா மீனாவையும் மீனா குடும்பத்தையும் அவமானப்படுத்தி பேசுகிறார். அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் பூ கட்டுற வேலையில வர வருமானம் பத்தலனா வேற ஏதாவது வேலை பார்க்க வேண்டியதுதானே, யாரை வளைச்சி போடலாம்னு யோசிப்பீங்களா என்று அசிங்கப்படுத்தி பேசுகிறார்.


இதனால் கலங்கி நிற்கும் மீனா கண்ணீருடன் நேராக கோவிலுக்கு கிளம்பி வர அதை பார்த்து அவருடைய அம்மாவும் சீதாவும் என்னாச்சு என்று கேட்க பதில் ஏதும் சொல்லாமல் நேராக கோவிலுக்குள் வருகிறார். இருவரும் பின்னாடியே ஓடி வந்து மீனாவை தடுத்து நிறுத்தி என்னாச்சு என்று கேட்க பதில் ஏதும் சொல்லாமல் அப்படியே சிலை போல நிற்கிறார்.


பிறகு அங்கிருக்கும் தண்ணீரை எடுத்து குடம் குடமாக மேலே ஊற்றிக் கொண்டு அங்க பிரதர்ஷணம் செய்ய தொடங்கி விட அதைப் பார்த்து இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். உடனே சீதா முத்துவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல சவாரிக்கு சென்று கொண்டிருக்கும் முத்து கோயிலுக்கு திரும்பி வருகிறார்.


இன்னொரு பக்கம் அண்ணாமலை வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி தன்னுடைய நண்பர் பரசுவிடம் சொல்லி வருத்தப்படுகிறார். பிறகு கோவிலுக்கு ஓடிவரும் முத்துவிடம் மீனாவின் அம்மாவும் தங்கச்சி சீதாவும் முத்து திட்டியதால் தான் மீனா இப்படி செய்வதாக நினைத்து அவரிடம் வருத்தப்பட்டு பேச முத்து மீனாவை எழுப்பி உட்கார வைக்க மீனா எதுவும் சொல்லாமல் கண்ணீர் விட்டு அழுது முத்துவின் மீது சாய்ந்து கொள்கிறார்.


முத்து என்னாச்சு யாராவது சொன்னாங்களா என்று கேட்க மீனா எதுவும் பேசாமல் இருக்க சரி வா வீட்டுக்கு போகலாம் என அழைத்துக் கொண்டு வருகிறார். வீட்டில் ரோகினி விஜயா கொடுத்த வெஜிடபிள் சூப் குடித்துவிட்டு மீனா சூப்பரா சமைக்கிறாங்க என்று மனோஜிடம் பாராட்ட மனோஜ் இதெல்லாம் அவகிட்ட போய் சொல்லிடாத அவ ஓவரா ஆடுவா, அவகிட்ட நீ டிஸ்டன்ஸ் மெயின்டன் பண்ணு என சொல்கிறார்.


பிறகு வீட்டுக்கு வரும் முத்து விஜயாவை நிறுத்தி மீனாவை என்ன சொன்னீங்க என்று சத்தம் போட இவ உன்கிட்ட உங்க அம்மா கொடுமை படுத்துறாங்க அதை தட்டி கேளுங்கன்னு கோல் மூட்டி கூட்டிட்டு வந்தாளா என ஆவேசப்படுகிறார். என்னமோ நீ அவளை நல்லபடியா பாத்துக்கிற மாதிரி வந்து பேசுற என்று விஜயா நக்கலாக பேச நான் என்ன வேணாலும் சொல்லுவேன் அதை பத்தி நீங்க கேள்வி கேட்காதீர்கள் ஆனால் நீங்கள் அவளை எதுவும் சொல்லக்கூடாது. நான் ஏற்கனவே இதை உங்களுக்கு கோவில்ல வச்சி சொல்லி இருக்கேன் என்று எச்சரித்து மீனாவை ரூமுக்கு அழைத்துச் செல்கிறார் முத்து.


மீனாவிடம் அம்மா என்ன சொன்னாங்க என்று கேட்க எதுவும் இல்ல விடுங்க என்று மீனா பதில் சொல்லி நீங்க சவாரிக்கு கிளம்புங்க என்று சொல்ல அப்போது முத்துவுக்கும் போன் வர சரி நீ துணியை மாத்து ஈரமா இருக்கு என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்புகிறார்.

அதைத்தொடர்ந்து விஜயா ரோகினியை அழைத்துக்கொண்டு பைனான்சியரிடம் பணம் கட்ட கிளம்புகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது. 


Advertisement