• May 04 2024

எல்லா இடத்திலும் கறுப்பு ஆடுகள்-பகாசுரன் படத்தில் உள்ள மைனஸ் இதுதான்-பயில்வான் ரங்கநாதன் கொடுத்த விமர்சனம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் ஆகிய படங்களை இயக்கியுள்ள மோகன் ஜி இயக்கத்தில் இன்றைய தினம் வெளியாகியுள்ள திரைப்படம் தான் பகாசுரன். இப்படத்தில் செல்வராகவனுடன் இணைந்து ராதாரவி, ராஜன்.கே, சரவண சுப்பையா, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி, பி.எல்.தேனப்பன். கூல் சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இப்படம் வெளியான நாள் முதலே பாஸிட்டிவான விமர்சனங்களை குவித்து வருகிறது. இந்நிலையில் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், பகாசுரன் படம் குறித்த தனது விமர்சனத்தை வீடியோவாக பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, பகாசுரன் படத்தில் செல்வராகவன் தெருக்கூத்து கலைஞராக நடித்துள்ளார். அவருக்கான ஓபனிங்கே வித்தியாமாக உள்ளது. சிவனை பற்றிய பாடல்களை பாடி பின்னர் சிவனடியாராக மாறுகிறார்.


அப்போது இளம்பெண் ஒருவர் முதியவரால் பலாத்காரம் செய்யப்படுகிறார். முதியவரை கொன்றுவிட்டு பெண்ணை காப்பாற்றுகிறார் செல்வராகவன். செல்வராகவனின் அப்பாவாக கே ராஜன் நடித்துள்ளார். கஷ்டப்படும் தெருக்கூத்து கலைஞரான செல்வராகவன், தனது மகளை கல்லூரியில் படிக்க வைக்கிறார். அங்கேதான் தப்பு ஆரம்பிக்கிறது. படிக்க போன இடத்தில் காதலிக்க ஆரம்பிக்கிறார் மகள். இதனை அவரது தாத்தா கேட்கும் போது அந்த இளைஞர் உண்மையாக காதலிப்பதாக கூறுகிறார்.

 பின்னர் ஒரு நாள் கல்லூரியில் தனது காதலருக்கு லிப் லாக் கொடுக்கிறார், அதை ஒருவர் போட்டோ எடுத்து வார்டனுக்கு அனுப்பி வைக்கிறார். அந்த வார்டன் இதுபோன்று சிக்கும் பெண்களை பிளாக்மெயில் செய்து விபச்சாரத்தில் தள்ளுகிறார். அப்படி ராதாரவியால் சீரழிக்கப்படுகிறார் செல்வராகவனின் மகள். பின்னர் ராதா ரவி செல்வராகவனால் கொல்லப்படுகிறார்.இடையில் மூன்று கொலைகள் அரங்கேற்றப்படுகின்றன. 


படத்தில் நடிகர் நட்டி ரிட்டையடான மேஜர், அவர் இந்த கொலை வழக்குகளில் போலீஸ் தேவதர்ஷினிக்கு உதவி செய்கிறார். மொபைல் ஆப்கள் மூலம் விபச்சார குற்றங்கள் நடைபெறுவதை கண்டுப்பிடிக்கிறார் நட்டி. விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை காப்பாற்றி அவர்களை காப்பகத்தில் தங்க வைக்கிறார் தேவதர்ஷினி. 

ஆனால் தனது உயர் அதிகாரியால் இடமாற்றம் செய்யப்படுகிறார்.எல்லா இடத்திலும் கறுப்பு ஆடுகள் உள்ளதை சொல்லியிருக்கிறார்கள். படத்தில் எடிட்டிங் சரியில்லை. சஸ்பென்ஸ் முன்கூட்டியே தெரிவதால் திரைக்கதை தள்ளாடுகிறது. சாம் சிஎஸ் இசை நல்லா இருக்கு. ஒளிப்பதிவு சரியில்லை, பல இடங்களில் லைட் லீக்காயிருக்கு, கேமரா ஷேக் ஆகியிருக்கு. ஒளிப்பதிவில் தவறுகள் பெரிதாக உள்ளன.


 இதை சரிப்படுத்திக் கொள்ள வேண்டும். நட்டி அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சில அபத்தமான காட்சிகளும் உள்ளன.தெருக்கூத்து கலைஞரான செல்வராகவன் விஜய் ரேஞ்சுக்கு ஃபைட் பண்ணுகிறார். அதையெல்லாம் நம்ப முடியவில்லை. தேவதர்ஷினி நன்றாக நடித்துள்ளார். 4 காட்சிகள் நடித்திருந்தாலும் நிறைந்து விடுகிறார். தெருக்கூத்து காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். செல்போன்தான் பகாசுரன் என்று சொல்லியிருக்கிறார்கள். 

பிளாக் மெயில் பண்ணும் போது சிம்கார்டை தூக்கிப்போட்டுவிட்டு வேறு சிம்கார்டை பயன்படுத்த வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும்.பகாசுரன் எப்படிப்பட்டவன் என்பதை தெருக்கூத்து மூலம் இன்னும் அழுத்தமாக காட்டியிருக்கலாம். ஆனால் மோகன் ஜி தவறி விட்டார். நல்ல கருத்தை சொல்ல வந்திருக்கிறார், ஆனால் திணறிவிட்டார். இதனால் படம் சில இடங்களில் கொஞ்சம் போரடிக்கிறது. இருப்பினும் படம் இன்றைய தலைமுறையின் ஆபத்தான வழிகளை அடையாளம் காட்டுகிறது. இவ்வாறு பயில்வான் ரங்கநாதன் பகாசுரன் படம் குறித்த தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement