• May 18 2024

இந்த சிறுவயதுக் குழந்தை யாரு தெரியுமா.. இப்போ தமிழ் சினிமாவோட டாப் நாயகியே இவங்க தான்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் 'விண்ணைத்தாண்டி வருவாயா' என்ற படத்தில் சிறிய ரோல் ஒன்றில் நடித்து அதன் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 


இதன் பின்னர் பல பல படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடி போட்டு  நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக மாறினார். இந்நிலையில் இவர் நடிப்பில் புராண கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள 'சாகுந்தலம்' என்ற திரைப்படம் தற்போது வெளியாகவுள்ளது. 


இப்படத்தினை எதிர்பார்த்து ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.மேலும் மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, தற்போது சிகிச்சை மூலமாக உடல் நிலை தேறி அந்த நோயிலிருந்து குணமாகி வருகிறார். 


இந்நிலையில் அந்தப் புகைப்படத்தில் உள்ள சிறுவயதுக் குழந்தை வேறு யாருமில்லை. நம்ம சமந்தாவின் சிறுவயது புகைப்படம் தான் அது. அதில் சமந்தா கராத்தே உடையணிந்து மாஸாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement