• May 03 2024

இந்த season தீயா இருக்கும், இதுல சிக்கப்போறது யாரா இருக்கும்- Bigg Boss Tamil Season 7 Grand Launch ரிலீஸ்- வைரலாகும் புது வீடியோ

stella / 7 months ago

Advertisement

Listen News!


பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று தான் பிக்பாஸ்.அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 6 வெற்றிக்கரமாக முடிவடைந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 7 ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பமாகவுள்ளது.இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கி வருகிறார். வரவிருக்கும் 7 ஆவது சீசனையும் அவர்தான் தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டு புரொமோக்கள் வெளிவந்துள்ளன. 


நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகும் போட்டியாளர்கள் யார் என்கிற விபரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் அதுகுறித்த தகவல்கள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.அதில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குச் சென்ற ஆயிஷா,ப்ரியங்கா, நிஷா ஆகியோர் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியைக் கழுவி ஊற்றிக் கொண்டிருக்கின்றனர். இதை பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ள போட்டியாளர் ஒருவர் கேட்டு விடுகின்றார். ஆனால் அவர் யார் என்பது தெரியவில்லை. இந்த ப்ரோமோ தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement