• May 12 2024

பிக்பாஸ் சீசன் 7 இல் களமிறங்கும் குக்வித் கோமாளி பிரபலம்- வெளியாகிய உறுதியான தகவல்- அடடே இந்த பாடகியும் வருகின்றாரா?

stella / 8 months ago

Advertisement

Listen News!

ஏராளமான ரசிகர்கள் விரும்பிப் பார்க்கப்படும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன்  செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் மாதம் ஆரம்பமாகும் என்று கூறப்படுகின்றது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிகழ்ச்சியிலிருந்து இதுவரை 2 ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. அத்தோடு இந்த சீசனில் புதுப்புது டுவிஸ்ட் எல்லாம் எல்லாம் காத்திருக்கின்றது. அதாவது இந்த முறை இரண்டு வீடு என்றும் இரண்டு பிக்பாஸ் என்றும் கூறப்படுகின்றது. இதனால் ரசிகர்கள் கடும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.


7வது சீசன் போட்டியாளர்கள் என நிறைய லிஸ்ட் வலம் வருகிறது, அப்படி இன்றும் ஒரு லிஸ்ட் வந்துள்ளது.அதில் தொகுப்பாளினி பாவனா, கிராமிய பாடகி ராஜலட்சுமி ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது, இவர்கள் இருவரும் விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமானவர்கள் தான். அத்தோடு ஷகீலா முக்கிய போட்டியாளராக கலந்து கொள்ளப் போவது உறுதியான தகவலாக வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement