• Dec 02 2022

பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பிக்கும் திகதியும் அறிவிச்சாச்சு- அட்டகாசமாக வெளியாகிய ப்ரோமோ

Listen News!
stella / 2 months ago
image
Listen News!

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 6 தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இதுவரை 5 சீசன்கள் கடந்த இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.மேலும் இதன்  6வது சீசன் வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது


இந்த நிலையில் சற்று முன்னர் விஜய் டிவி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9ஆம் தேதி தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்பதும், விரைவில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்த புரோமோ வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.