• Mar 12 2026

கேப்டன் சமாதியில் மரியாதை செலுத்திய Bigg Boss பூர்ணிமா... நெகிழ்ச்சியான சம்பவம்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அந்நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு வாரமே எஞ்சி உள்ளதால், யார் டைட்டில் வின்னர் ஆவார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.


இந்த வாரம் பணப்பெட்டி கொண்டுவரப்பட்டது. பணத்தின் மதிப்பு ஏற ஏற இதை யார் எடுக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இதனிடையே பூர்ணிமா பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறி இருக்கிறார். 


அவர் 16 லட்சம் தொகையுடன் கூடிய பணப்பெட்டியோடு வெளியேறி இருப்பதை பார்த்த ரசிகர்கள் இது ஸ்மார்ட் மூவ் என பூர்ணிமாவை பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி இதுவரை நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன்களில் அதிகபட்ச தொகையுடன் கூடிய பணப்பெட்டியோடு வெளியேறிய போட்டியாளர் என்கிற பெருமையையும் பூர்ணிமா பெற்றுள்ளார்.


பிக் பாஸ் விட்டு வெளியே வந்த பூர்ணிமா தனது குடும்பத்தினரை சந்தித்ததோடு அதன் பிறகு அவர் சமீபத்தில் இறந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த அவர்களின் சமாதி இடத்திற்கு சென்று ஆரத்திக்காட்டி அஞ்சலி செலுத்தியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். 


Advertisement

Advertisement