தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். தமிழில் இந்த நிகழ்ச்சியான இதுவரைக்கும் 5 சீசன்களைக் கடந்துள்ளது.இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இதில் போட்டியாளராக பலரையும் கவர்ந்தவர் தான் நிரூப்.பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள் சினிமாவில் ஹீரோ, ஹீரோயின் ஆகும் காலம், அந்த வரிசையில் அடுத்து வருகிறார் நிரூப். பிக்பாஸ் 5வது சீசனில் கலந்து கொண்ட இவர் தற்போது ரெயின்போ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக இருக்கிறார்.
வசந்த் ராமசாமியின் ஸ்ரீ அன்னமார் புரொடக்சன்ஸ் சார்பில் வசந்த் ராமசாமி மற்றும் இயக்குநர் எஸ்.பி.ஹோசிமினின் ஹோசிமின் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ரெயின்போ. ஹோசிமினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விவேக் கைபா பட்டாபிராம் இயக்குகிறார்.
மேலும் இப்படத்தில் பிக்பாஸ் புகழ் நிரூப் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் சிம்ரான் ராஜ் உள்ளிட்ட 7 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.
மற்ற ஹீரோயின்கள் முடிவாகவில்லை. இவர்களுடன் மைம் கோபி , மனோபாலா, சார்லஸ் வினோத் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.மேலும் வினோத் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சுபாஷ் ஆனந்த் இசை அமைக்கிறார். இது பேண்டசி படமாக உருவாகிறது. இதன் படப்பிடிப்புகள் பூஜையுடன் நேற்று தொடங்கியது.
பிற செய்திகள்
- நதியாவின் மகள்களா இவர்கள்; இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…!
- ஹீரோவாக அறிமுகமாகும் பிக்பாஸ் நிரூப்- அந்த படத்தில் ஏழு ஹீரோயின்களா..?
- நடிகை நயன்தாரா பற்றி வெளியான சூப்பர் தகவல்…இவ்வளவு நாளும் தெரியாம போச்சே..!
- பிரபல இயக்குநரை அழைத்துக் கதை கேட்ட விஜய்? அடடே இவரா..படம் ஹிட்டுத்தான் போல
- நடிகர் பிரபுவின் மகள் தற்போது இப்படியொரு தொழில் செய்கின்றாரா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!