சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 171’ படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் கடந்த வாரம் இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ படப்பிடிப்பு நடந்ததாக செய்திகள் கசிந்தது. இந்த நிலையில் இந்த புரமோ டீசர் வீடியோ தற்போது ரிலீசுக்கு தயாராக இருப்பதாக கூறப்படும் நிலையில் பாலிவுட் பிரபலம் ஒருவர் இந்த வீடியோவை பார்த்து ஆச்சரியப்பட்டு ரஜினியை இப்படியும் காண்பிக்க முடியுமா என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் 'தலைவர் 171’. இந்த படத்தின் திரைக்கதை எழுதும் பணியை முடித்துவிட்ட லோகேஷ் கனகராஜ் தற்போது இந்த படத்தில் நடிக்கும் நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வை செய்து வருவதாகவும் இதனை அடுத்து படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
ரஜினிக்கு ஜோடியாக இந்த படத்தில் ஷோபனா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த படத்தின் ஒளிப்பதிவு கிரிஷ் கங்காதரன் என்றும் ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ’விக்ரம்’ ’லியோ’ படம் போலவே படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ஒரு புரமோ வீடியோவை வெளியிட முடிவு செய்தால் லோகேஷ் கனகராஜ், ரஜினியை வைத்து இரண்டு நாள் படப்பிடிப்பு நடத்தியதாகவும் தற்போது அந்த வீடியோ தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த வீடியோவை தான் பிரபல பாலிவுட் இயக்குனர் சந்தீப் ரெட்டி பார்த்து ஆச்சரியப்பட்டதாகவும் இதுவரை ரஜினியை இது மாறி நான் பார்த்ததே இல்லை என்றும் ரஜினியை இப்படி கூட காட்ட முடியுமா என்று ஆச்சரியப்பட்டுள்ளார். இவர் தான் சமீபத்தில் வெளியான ’அனிமல்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பதிவை பார்த்து புரமோ வீடியோவுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Listen News!