• Apr 26 2024

தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்...ஹீரோயினி யார் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தமிழில் தயாரிக்க உள்ள முதல் படத்தில் நடிக்க உள்ள ஹீரோ மற்றும் ஹீரோயினி குறித்து தகவல் தற்ஆபாது வெளியாகி உள்ளது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, தற்போது பட தயாரிப்பிலும் இறங்கி உள்ள தகவல் ரசிகர்களிடத்தே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக தோனி எண்டர்டெயின்மெண்ட் என்கிற நிறுவனத்தை ஆரம்பித்து அதன்மூலம் படங்களை தயாரிக்கும் பணியில் மும்முரமாக இறங்கி உள்ளார். ஏற்கனவே சில விழிப்புணர்வு குறும்படம் மற்றும் அதர்வா தி ஆரிஜின் என்கிற கிராபிக்ஸ் நாவலை தயாரித்துள்ள இந்நிறுவனம் தற்போது பட தயாரிப்பில் இறங்கியுள்ளது.

தோனி தனது முதல் படத்தை தமிழில் தான் தயாரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். ஏற்கனவே இதுகுறித்த தகவல்கள் வெளியானதோடு, அந்த படத்தில் நடிக்க ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்பட்டது. ஆனால் அவையெல்லாம் வதந்தி என்பது தற்போது உறுதியாகி உள்ளது.

அதன்படி தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தமிழில் தயாரிக்கவுள்ள முதல் படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்க உள்ளதாகவும், இப்படத்திற்கு தோனியின் மனைவி சாக்‌ஷி தான் கதை எழுதி உள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்த அறிவிப்பில் இப்படத்தில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இவ்வாறுஇருக்கையில்  தற்போது தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகை குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி அப்படத்தில் நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான ஹரீஷ் கல்யாண் தான் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 



அதேபோல் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை பிரியங்கா மோகனிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement