• May 04 2024

துணிவு பட பிரபலங்களுடன் பிக்பாஸ் பிரபலம்- அடடே இவரும் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் தானே?

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் துணிவு. இத்திரைப்படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது .


மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


இந்நிலையில் பிரபல டிவி தொகுப்பாளினியான மமதி சாரி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துணிவு படத்தின் இரண்டு புதிய ஷாட்களுக்காக டப்பிங் பணிகளை மேற்கொண்டு வரும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். Four Frames Sound Company -யில் ஜெகன் மாதேஷ் & துணிவு படத்தின் உதவி இயக்குநரான அசோக் குமார் புருஷோத்தமனுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.


இநதப் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. மேலும் சில நாட்களுக்கு முன் மமதி துணிவு படத்திற்காக டப்பிங் பணிகளை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement