• May 18 2024

கல்யாணம் முடிந்த கையோடு கணவருக்கு அல்வா கொடுத்த ஹன்சிகா-திடீரென தீயாய் பரவும் தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை ஹன்சிகா, திருமணம் முடிந்த பின் தன் காதல் கணவர் சோஹைல் கதூரியாவுக்காக ஸ்வீட் ஒன்றை செய்து  கொடுத்து அசத்தி உள்ளார். 

நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு, சோஹைல் கதூரியா என்கிற தொழிலதிபருக்கும் கடந்த வாரம் திருமணம்  பிரமாண்டமாக நடைபெற்றது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலுள்ள 450 ஆண்டுகள் பழமைவாய்ந்த முண்டோடா அரண்மனையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்துமுடிந்தது.மேலும்  இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.


அத்தோடு திருமணம் முடிந்த கையோடு மும்பை திரும்பிய நடிகை ஹன்சிகாவிடம் அவரின் ஹனிமூன் பிளான் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் தற்போது கைவசம் உள்ள படங்களில் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதன்பின்னரே ஹனிமூன் பற்றி யோசிப்போம் என்றும் தெரிவித்து இருந்தார். இதன்மூலம் திருமணத்துக்கு பின்பும் நடிப்பேன் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் ஹன்சிகா.


இவ்வாறுஇருக்கையில் , நடிகை ஹன்சிகா, திருமணம் முடிந்த பின் தன் காதல் கணவருக்காக ஸ்வீட் ஒன்றை செய்து அசத்தி உள்ளார். அதன்படி ஹன்சிகா தனது கணவர் சோஹைல் கதூரியாவுக்கு அல்வா செய்துகொடுத்துள்ளாராம். மேலும் இதுகுறித்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதைப்பார்த்த நெட்டிசன்கள் கல்யாணம் முடிஞ்ச உடனே கணவருக்கு அல்வாவா என ஹன்சிகாவை ஜாலியாக கிண்டலடித்து வருகின்றனர். அத்தோடு நடிகை ஹன்சிகா கைவசம் தமிழில், ரவுடி பேபி, பார்ட்னர், கார்டியன் மற்றும் இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படம் என 4 படங்களை கைவசம் வைத்துள்ளார்.


Advertisement

Advertisement