• Apr 03 2025

நடுரோட்டில் ‘பாக்யலட்சுமி’ கோபி, ரேஷ்மா செய்யும் வேலையை பாருங்க.. வீடியோ வைரல்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்பாக்யலட்சுமிஎன்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பாகபாக்யலட்சுமிகேரக்டரில் நடித்து வரும் சுசித்ரா ஷெட்டி, சதீஷ்குமார் கேரக்டரில் எடுத்து வரும் கோபிநாத் மற்றும் நந்திதா ஜெனிஃபர் கேரக்டரில் எடுத்து வரும் ரேஷ்மா ஆகியோர்களுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் குவிந்து கொண்டிருக்கின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில்பாக்யலட்சுமிசீரியலில் சதீஷ் கேரக்டரில் நடித்து வரும் கோபி இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பதும் அவ்வப்போது அவர் சில அறிவுரைகளுடன் கூடிய வீடியோவை பதிவு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் என்பதும் தெரிந்தது.

அந்த வகையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் பள்ளி குழந்தைகளின் ஊர்வலம் ஒன்றுக்கு தலைமை தாங்கி தண்ணீரை வேஸ்ட் ஆக்க கூடாது என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். பள்ளி குழந்தைகள் சீருடையுடன் வரிசையாக நின்று தண்ணீரை வீணாக்கக்கூடாது என்று கோஷமிட அதற்கு ஆதரவாகபாக்யலட்சுமிகோபி மற்றும் ரேஷ்மா ஆகிய இருவரும் உள்ள காட்சியின் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகியுள்ளது

இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வருகை தந்த கோபி மற்றும் ரேஷ்மாவுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


Advertisement

Advertisement