71வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (ஆகஸ்ட் 1) டெல்லியில் அறிவிக்கப்பட்டது. பல வாரங்களாக நடுவர் குழுவினரால் நடைபெற்ற மதிப்பீடுகளுக்குப் பிறகு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மத்திய அமைச்சர் எல். முருகனிடம் இறுதி அறிக்கையை சமர்ப்பித்து, மாலை 6 மணிக்கு தேசிய ஊடக மையத்தில் விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த ஆண்டில், தமிழ் திரைப்படமான 'பார்க்கிங்' மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை கைப்பற்றியுள்ளது. கார் பார்க்கிங் இடத்திற்காக இரு வீட்டுக்காரர்களுக்கு இடையே நடைபெறும் சண்டையை மையமாகக் கொண்டு உருவான இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ். பாஸ்கர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சிறந்த திரைக்கதையாசிரியருக்கான விருது ராம்குமார் பாலகிருஷ்ணன், சிறந்த துணை நடிகருக்கான விருது எம்.எஸ். பாஸ்கர், சிறந்த படம் (தமிழ்) விருது 'பார்க்கிங்' போன்ற விருதுகளை பெற்றுள்ளது.
அதேபோல், தெலுங்கு திரைப்படமான 'பகவந்த் கேசரி' இந்த ஆண்டு தேசிய விருதுகளில் சிறந்த தெலுங்கு திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. பாலகிருஷ்ணா, ஸ்ரீலீலா, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்த இப்படம் குடும்ப பாசம், ஆக்ஷன், காதல் மற்றும் உணர்வுகளை உள்ளடக்கிய சிறப்பான திரைப்படமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
Listen News!