• Apr 27 2024

பிரின்ஸ் படத்தில் பீஸ்ட் படத்தின் ரெஃபரன்ஸ் காட்சி- துள்ளிக் குதித்த விஜய் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


இயக்குநர் அனுதீப் குமார் இயக்கத்தில் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பிரின்ஸ். இப்படம் இன்றைய தினம் அதிகாலை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களையே பெற்று வருகின்றது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை  மரியா ரியாபோஷாப்கா நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபாகர் & அனந்த நாராயணன் வசனம் எழுதியுள்ளனர்.தமிழகம் முழுவதும் 427 திரையரங்க திரைகளில் இந்த படம் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் ப்ரின்ஸ் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் ரெஃபரன்ஸ் இடம்பெற்றுள்ளது. பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடல் ப்ரின்ஸ்  சிவகார்த்திகேயனின் ரிங் டோனாக ஒலிக்கிறது. பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடலை எழுதியவர் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement