• May 05 2024

'பீஸ்ட்' உங்களுக்கு சூப்பர் ஹிட்டா... சன் டிவியை வைச்சு செய்யும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்யின் 65-ஆவது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்தார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். மேலும் அனிருத் இசையமைத்த இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இப்படமானது பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்திருந்தது. சன் பிச்சர்ஸ் தயாரித்திருந்த இப்படமானது ரசிகர்களின் எதிர்பார்ப்பை சிறு அளவு கூட பூர்த்தி செய்யாமல் படுதோல்வியடைந்தது.


இந்நிலையில் இப்படத்தை வருகிற தீபாவளி அன்று பிரபல சேனல்களில் ஒன்றாகிய சன் டிவியில் ஒளிபரப்பு செய்யவுள்ளனர். அதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.

இதில் 'பீஸ்ட் புத்தம் புதிய சூப்பர்ஹிட் திரைப்படம்' என்று வாய்ஸ் ஓவர் வருவதை கவனித்த ரசிகர்கள் "இது உங்களுக்கு சூப்பர்ஹிட் திரைப்படமா" என்று கலாய்த்து வருகிறார்கள். 


ஏனெனில் ஏற்கெனவே இப்படத்தை பற்றி பல விமர்சனங்களும் எழுந்திருந்தன. அதாவது "கதையே இல்லாமல் விஜய்யை 2 மணி நேரம் நடக்க விட்டிருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும்.  கமர்சியல் படங்களில் லாஜிக் மீறல்கள் சாதாரணம் தான், அதற்கென்று அள்ளி கொட்டினால் தாங்கிக்கொள்ள முடியாது.  மொத்தத்தில் பீஸ்ட் திரை தீப்பிடிக்க வில்லை" எனக் கூறியிருந்தனர்.

இந்நிலையில் சன் டிவி 'சூப்பர் ஹிட் படம்' எனக் கூறியமை ரசிகர்ளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இதனால் சன் டிவியை தாறுமாறாக கலாய்த்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement