• May 04 2024

அட்ராசக்க...100 கோடி வசூலை நெருங்கும் 'குஷி' - சமந்தாவுக்கு அடித்த ஜாக்பாட்...!

Jo / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள குஷி திரைப்படம் கடந்த வாரம் 1ம் தேதி வெளியானது. இயக்குநர் சிவ நிர்வாணா இயக்கியுள்ள இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.


விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொள்ள, அதன்பின்னர் அவர்களுக்குள் நடக்கும் ஈகோ யுத்தம் தான் குஷி. விஜய் - ஜோதிகா நடிப்பில் 2000ம் ஆண்டு வெளியான குஷி படத்தின் டைட்டில் போல, கதையிலும் அதே ஈகோவை பின்னணியாக வைத்து, கொஞ்சம் கலர்ஃபுல்லாக ட்ரீட் கொடுத்துள்ளார் சிவ நிர்வாணா. ஒட்டுமொத்தமாக 2கே கிட்ஸ்கள் கொண்டாடும் படமாக குஷி உருவாகியுள்ளது.


இந்நிலையில் குஷி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் குறித்து தகவல்கள் வெளியாகின. அதன்படி குஷி திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 30 கோடி வசூலித்துள்ளதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்தது. அதேபோல், முதல் இரண்டு நாட்களில் அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் 1 மில்லியன் டாலர்கள் கலெக்‌ஷன் ஆகியுள்ளது. தொடர்ந்து குஷி படத்துக்கு சிறப்பான ஓபனிங் கிடைத்ததால், இரண்டாவது நாளிலேயே 51 கோடி ரூபாயை கடந்தது.


அதன் தொடர்ச்சியாக முதல் வார இறுதியான நேற்றும் (செப் 3) குஷி படத்தின் கலெக்‌ஷன் தாறுமாறு என சொல்லப்படுகிறது. அதன்படி, மூன்றாவது நாளில் 20 முதல் 25 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது குஷி. மொத்தமாக மூன்று நாட்களில் 75 கோடி ரூபாய் கலெக்‌ஷன் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


Advertisement

Advertisement

Advertisement