• May 06 2024

6 நாள் முடிவில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் பெற்ற வசூல் எவ்வளவு தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

சிம்புவின் வெந்து தணிந்தது காடு தொடர்ந்து தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் என்று அறிமுகமானாலும் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகிய மாநாடு திரைப்படம் இவருடைய கெரியரில் திருப்பு முனையாக அமைந்தது.

இதனை அடுத்து ஹன்சிகா நடிப்பில் வெளியான மஹா திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.இதனை அடுத்து செப்டெம்பர் 15ம் திகதி வெளியாகிய திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இப்படத்திற்காக சிம்பு தனது உடல் எடையையுமம் குறைத்து இருந்தார்.


மேலும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகின்றது. இப்படத்தின் வெற்றியை எல்லாம் படக்குழு சிறப்பாக கொண்டாடி இருந்தனர்.

அந்த வகையில் முதல் நாளில் இருந்து நல்ல வசூல் வேட்டை நடத்திவரும் இப்படம் அடுத்தடுத்த நாட்களில் வசூலில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 6 நாள் முடிவில் படம் உலகம் முழுவதுமே ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement