• May 05 2024

பரிதாப நிலைக்குச் சென்ற 'ஆதிபுருஷ்' வசூல்... 6நாட்கள் முடிவில் வெறும் இத்தனை கோடி தானா..?

Prema / 10 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் 600 கோடி பட்ஜெட், 3டி, மோஷன் கேப்சர் டெக்னாலஜி என ஹாலிவுட்டுக்கே சவால் விடும் வகையில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் தான் ஆதிபுருஷ். ஆனால், இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பு, விமர்சனம், பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் இவையெல்லாவற்றையும் பார்க்கும் போது மிகவும் பரிதாபமாகவே உள்ளது. 


அதாவது ராமாயணத்தை மார்டன் வெர்ஷனில் பட்டி டிங்கரிங் செய்து, 2கே கிட்ஸ்களுக்காக எடுக்கப்பட்ட கார்ட்டூன் மூவி போல இருப்பதாக ரசிகர்கள் பலரும் இப்படத்தினை ட்ரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆதிபுருஷ் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் குறித்து படக்குழு தற்போது அறிவித்துள்ளது.


அந்தவகையில் இந்தப் படம் வெளியாகி தற்போது 6 நாட்கள் கடந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் மொத்தம் 410 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. பிரபாஸ் ஒரு முன்னணி நடிகராக இருந்தும் அவரின் படம் இந்தளவிற்கு குறைவான கலெக்ஷனைப் பெற்றுள்ளமை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement