• May 03 2024

சின்னத்திரையில் கால் பதிக்கும் நடிகர் விஜயகுமார்... அதுவும் எந்த சீரியலில் தெரியுமா... கதாபாத்திரம் இதோ..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அதிகளவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் மனங்களை கொள்ளை கொண்ட ஒருவரே நடிகர் விஜயகுமார்.


இவர் அன்று தொடக்கம் இன்றுவரை நடிப்பிலேயே தனது கவனத்தை அதிகளவில் செலுத்தி வருகின்றார். அந்தவகையில் கடைசியாக லெஜெண்ட், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்திருந்தார்.


இந்நிலையில் தற்போது விஜயகுமார் சினிமாவைத் தாண்டி சீரியலிலும் காலடி எடுத்து வைத்திருக்கின்றார். அதாவது ஜீ தமிழிலில் ஒளிபரப்பாகி வரும் 'கார்த்திகை தீபம்' என்ற சீரியலில் கார்த்திக்கின் தாத்தாவான சேத்தூர் ஜமீன் ராஜ சேதுபதியாக களமிறங்குகின்றார். 


இதுகுறித்த ப்ரோமோவை வெளியிட்டு அவரின் கதாபாத்திரத்தை சீரியல் குழுவினர் அறிமுகப்படுத்தி வைத்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement